நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்கள் இடையே பரபரப்பு

தமிழகத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது., இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் கூடிய தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை
 

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்கள் இடையே பரபரப்பு

தமிழகத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் கூடிய தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.inஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே நாளை காலை 9 மணி முதல் இந்த இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக பொதுத்தேர்வே எழுதாமல் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web