கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: மேலும் சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை கடைபிடிக்க வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இந்த நிலையில் தமிழகத்தின் மற்றும் வேறுசில மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு
 
கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: மேலும் சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதை கடைபிடிக்க வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

இந்த நிலையில் தமிழகத்தின் மற்றும் வேறுசில மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகமாகி வருவதை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்தது. இதனை உறுதி செய்வது போல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு முதல்வர் நடத்தும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது

காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் விவாதிக்கும் உள்ளதாகவும் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது

ஏற்கனவே கொரோனா பாதிப்பை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களை தமிழக அரசு நேற்று வெளியிட்ட நிலையில் நாளை மீண்டும் நாளை கலெக்டர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நாளைய ஆலோசனைக்குப் பின்னர் தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web