அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம்: தங்கதமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அம்முக வெற்றி பெற்றால் அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மாறாக அதிமுக வெற்றி பெற்றால் அதிமுகவில் தான் இணைய தயார் என்றும் தங்கதமிழ்செல்வன் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அதிமுகவில் சேர தங்கதமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தங்கதமிழ்செல்வன் கூறியபோது, ‘எனது சவாலை புரிந்து கொள்ளாமல் கடம்பூர் ராஜூ குழம்பிப்போய் உள்ளார். நான் அதிமுகவில் இணைய
 
thanga-tamilselvan

அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம்: தங்கதமிழ்செல்வன் திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அம்முக வெற்றி பெற்றால் அதிமுக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் மாறாக அதிமுக வெற்றி பெற்றால் அதிமுகவில் தான் இணைய தயார் என்றும் தங்கதமிழ்செல்வன் சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘அதிமுகவில் சேர தங்கதமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து தங்கதமிழ்செல்வன் கூறியபோது, ‘எனது சவாலை புரிந்து கொள்ளாமல் கடம்பூர் ராஜூ குழம்பிப்போய் உள்ளார். நான் அதிமுகவில் இணைய தூது விடுவதாகக் கூறுகிறார்.

அதிமுகவில் இணைவதற்கு பதில் மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம்: தங்கதமிழ்செல்வன்தற்போதைய அதிமுகவில் இணைவதற்குப் பதிலாக மொட்டைக் கிணற்றில் விழுந்துவிடலாம். எனவே, என் கருத்தைப் புரிந்து கொண்டு பேசுவது தான் கடம்பூர் ராஜூவின் அமைச்சர் பதவிக்கு அழகு. அதிமுகவில் யாருக்கும் தலைமைப் பண்பு கிடையாது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை. அதனால் தான் அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் மேடைகளில் உளறுகின்றனர்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

From around the web