ரஜினியின் புகழ் பலமடங்கு பெருக வைகோ கூறிய அறிவுரை

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இதை செய்திருந்தால் ரஜினியின் புகழ் இன்னும் பல மடங்கு பெருகி இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த வைகோ, ‘பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினிகாந்த் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் அவரது புகழ்
 
ரஜினியின் புகழ் பலமடங்கு பெருக வைகோ கூறிய அறிவுரை

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இதை செய்திருந்தால் ரஜினியின் புகழ் இன்னும் பல மடங்கு பெருகி இருக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த வைகோ, ‘பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினிகாந்த் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து இருந்தால் அவரது புகழ் பலமடங்கு உயர்ந்து இருக்கும் என்று கூறினார்

யுனெஸ்கோவால் இந்தியாவின் சாக்ரடீஸ் என புகழப்பட்ட பெரியார் குறித்து தெரிந்துகொள்ள வடநாட்டு இளைஞர்களும் விருப்பம் தெரிவித்து வருவதாகவும் பெரியாரின் புகழை யாராலும் அழிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்

From around the web