அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: யாராலும் பிடிக்க முடியாத டிடிவி தினகரன் காளை

உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 950 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் அந்த காளையாருக்கும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அம்மா
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: யாராலும் பிடிக்க முடியாத டிடிவி தினகரன் காளை

உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 950 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் அந்த காளையாருக்கும் பிடிபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்

இதேபோல் அமைச்சர் ஆர்பி சண்முகம் அவர்களின் காளையும் யாருக்கும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை வரை நடைபெறவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web