2021ல் முக அழகிரி அதிசயங்கள் நிகழ்த்துவார்: எஸ்வி சேகர்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில் அழகிரி சமீபத்தில் ஒருவிழாவில் பேசியபோது, மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயமாகிடுச்சு. அதற்கு நானே எடுத்துக்காட்டு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-க்களோ எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பேசுறாங்க. ஆனால், என்கூடப் பழகியவங்க.. எல்லாம் இப்போது என்னிடம் பேசுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.. இந்த நிலைமையெல்லாம் எப்போது மாறப்போகுதுன்னு *தெரியவில்லை. மாறினால் அவ்வளவுதான். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததைச் சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும்தான் கலைஞரின்
 

2021ல் முக அழகிரி அதிசயங்கள் நிகழ்த்துவார்: எஸ்வி சேகர்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்ட நிலையில் அழகிரி சமீபத்தில் ஒருவிழாவில் பேசியபோது, மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயமாகிடுச்சு. அதற்கு நானே எடுத்துக்காட்டு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ, எம்.பி-க்களோ எனக்கு வணக்கம் சொல்லிவிட்டுப் பேசுறாங்க. ஆனால், என்கூடப் பழகியவங்க.. எல்லாம் இப்போது என்னிடம் பேசுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.. இந்த நிலைமையெல்லாம் எப்போது மாறப்போகுதுன்னு *தெரியவில்லை. மாறினால் அவ்வளவுதான். என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும். நினைத்ததைச் சாதிப்பேன், நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும்தான் கலைஞரின் பிள்ளை அல்ல; நானும் கலைஞரின் பிள்ளைதான். அதை நினைவில் வைச்சுக்கங்க என்று கூறினார்.

முக அழகிரியின் இந்த பேச்சு குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய எஸ்வி சேகர்,’முகஅழகிரி நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல நண்பருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 2021ல் அதிசயம் நிகழ்த்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க என் வாழ்த்துக்கள் நண்பரே’ என்று கூறியுள்ளார்.

2021ல் முக அழகிரி அப்படி என்ன அதிசயம் நிகழ்த்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web