ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றுச் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பில் உள்ள நிலையில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சரோஜா வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்
 
ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி பெற்றுச் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பில் உள்ள நிலையில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.பி.துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சரோஜா வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த நான்கு ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன்படி ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் அமைச்சர் சரோஜாவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web