ரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை? பிரேமலதா விஜயகாந்த்

ரஜினி-பெரியார் பிரச்சனை குறித்து அதிமுக, திமுக, திக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவருமே விமர்சனம் செய்துவிட்ட நிலையில் விமர்சனம் செய்யாத இரண்டே இரண்டு கட்சிகள் என்றால் அது தேமுதிக மற்றும் பாமக என்றுதான் கூறலாம் இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று ரஜினியை விமர்சனம் செய்திருக்கிறார். பெரியாரை விமர்சனம் செய்த ரஜினி வெறும் அம்புதான் என்றும் அவருக்குப் பின்னால் இருந்து இயக்குவது யாரோ இருக்கிறார்கள் என்றும் கூறிய
 
ரஜினியை இயக்கும் அம்பு யார் என தெரியவில்லை? பிரேமலதா விஜயகாந்த்

ரஜினி-பெரியார் பிரச்சனை குறித்து அதிமுக, திமுக, திக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல முக்கிய கட்சியின் தலைவர்கள் அனைவருமே விமர்சனம் செய்துவிட்ட நிலையில் விமர்சனம் செய்யாத இரண்டே இரண்டு கட்சிகள் என்றால் அது தேமுதிக மற்றும் பாமக என்றுதான் கூறலாம்

இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று ரஜினியை விமர்சனம் செய்திருக்கிறார். பெரியாரை விமர்சனம் செய்த ரஜினி வெறும் அம்புதான் என்றும் அவருக்குப் பின்னால் இருந்து இயக்குவது யாரோ இருக்கிறார்கள் என்றும் கூறிய பிரேமலதா பெரியார் யார் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே தெரியும் என்றும் துக்ளக் விழாவில் துக்ளக் குறித்து மட்டும் ரஜினி பேசியிருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்

இத்தனை நாட்கள் இந்த பிரச்சனை கொளுந்து விட்டு எரியும்போது எல்லாம் அமைதியாக இருந்த பிரேமலதா விஜயகாந்த், தற்போது இந்த பிரச்சனையை அடங்கி வரும் நிலையில் திடீரென கிளப்பிவிட்டு இருப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்

From around the web