பிரசவத்தின்போது உயிரிழந்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: போராடி காப்பாற்றப்பட்ட இரட்டை குழந்தை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் போராடி அவருடைய வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளை எந்த விதமான பாதிப்பும் இன்றி வெளியே எடுத்தனர். தற்போது அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் முதல் முறையாக மதுரையில் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை
 

பிரசவத்தின்போது உயிரிழந்த கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: போராடி காப்பாற்றப்பட்ட இரட்டை குழந்தை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் போராடி அவருடைய வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளை எந்த விதமான பாதிப்பும் இன்றி வெளியே எடுத்தனர். தற்போது அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் முதல் முறையாக மதுரையில் உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதேபோல் மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக மதுரையிலும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மதுரை மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு தமிழகத்தில் 53 பேர் உயிரிழந்தனர் என்பதும், தமிழகத்தில் மொத்தம் இதுவரை 757 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web