இனி ஜாதிச்சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவ மாணவிகள் ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு செய்தி பரவலாகி வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ’பள்ளிகளில் ஐந்தாம்
 
இனி ஜாதிச்சான்றிதழ் தேவையில்லை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதும் மாணவ மாணவிகள் ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு செய்தி பரவலாகி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ’பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என தெரிவித்துள்ளார்

ஒரு மாணவர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் போதே அவரிடமிருந்து ஜாதி சான்றிதழ் பெற்று வருவதாகவும் அது ஸ்காலர்ஷிப் என்ற முறைக்கு மட்டுமே தேவைப்படுவதாகவும் மற்றபடி இடையில் படிக்கும் மாணவர்களிடம் ஜாதி சான்றிதழ் கேட்கும் வழக்கம் இல்லை என்றும் அவர் விளக்கினார்

இதனை அடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web