கே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு

முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சற்று முன்னர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர் இந்த நிலையில் அவர் மீது நம்பியவர்களை ஏமாற்றுதல் , ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்பட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் அறிவித்தனர் இதனை அடுத்து அவரை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இதனால் அவர் கோவை சிறையில்
 
கே.சி.பழனிச்சாமி மீது 11 பிரிவுகளில் வழக்கு: சிறையில் தள்ளப்பட்டதால் பரபரப்பு

முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிகாலை அதிரடியாக கோவையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சற்று முன்னர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்

இந்த நிலையில் அவர் மீது நம்பியவர்களை ஏமாற்றுதல் , ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்பட 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீசார் அறிவித்தனர்

இதனை அடுத்து அவரை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இதனால் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்

சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிச்சாமி தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து விட்டதாகவும் தான் மட்டுமே உண்மையான அதிமுக என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web