சென்னை மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றிய கார்: நூலிழையில் உயிர் தப்பிய மூவர்

சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவர் நூலிழையில் உயிர் தப்பினர் சேலத்தைச் சேர்ந்த மூன்று பேர் பணிநிமித்தம் காரணமாக சென்னைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனை காரில் சென்றவர்கள் கவனிக்காத நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனே
 

சென்னை மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றிய கார்: நூலிழையில் உயிர் தப்பிய மூவர்

சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவர் நூலிழையில் உயிர் தப்பினர்

சேலத்தைச் சேர்ந்த மூன்று பேர் பணிநிமித்தம் காரணமாக சென்னைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனை காரில் சென்றவர்கள் கவனிக்காத நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனே சுட்டிக் காட்டியதை அடுத்து காரை அவசர அவசரமாக நிறுத்தி உடனடியாக காரில் இருந்த மூவரும் காரை விட்டு வெளியேறினர். சரியான சமயத்தில் காரில் இருந்து வெளியேறியதால் அவர்கள் நூலிழையில் தப்பித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். காரின் பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால்இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பல்லாவரம்-கிண்டி சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

From around the web