முருகக் கடவுளுக்கு தீபாராதனை காட்டிய தமிழிசை சௌந்தரராஜன்: வைரலாகும் வீடியோ

கந்த சஷ்டி விவகாரத்திற்கு பின்னர் முருகக் கடவுள் குறித்த விழிப்புணர்வு இந்து மக்களிடையே பெரிதாக எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவினர் இன்று தங்களுடைய வீடுகளில் முருகனின் வேலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து பாஜகவினர் தங்கள் வீடுகளில் வேலுக்கு பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது கவர்னர் இல்லத்தில் உள்ள முருகனின் சிலைகளுக்கு
 
முருகக் கடவுளுக்கு தீபாராதனை காட்டிய தமிழிசை சௌந்தரராஜன்: வைரலாகும் வீடியோ

கந்த சஷ்டி விவகாரத்திற்கு பின்னர் முருகக் கடவுள் குறித்த விழிப்புணர்வு இந்து மக்களிடையே பெரிதாக எழுந்துள்ளது. குறிப்பாக பாஜகவினர் இன்று தங்களுடைய வீடுகளில் முருகனின் வேலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனை அடுத்து பாஜகவினர் தங்கள் வீடுகளில் வேலுக்கு பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா மாநில கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது கவர்னர் இல்லத்தில் உள்ள முருகனின் சிலைகளுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

ஆடி சஷ்டி ஆராதனை அருள்மிகு முருகக் கடவுளுக்கு …..’வேலும்’ ‘மயிலும்’ துணை.. கன மழையிலும் கனிவுடன் ஆராதனையை ஆண்டவன் ஏற்றுக்கொண்டது அகமகிழ்ச்சி. விரைவில் கொரோனா வைரஸில் இருந்து அனைவரும் குணமாகி நாடு நல்ல நிலைக்கு வர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

From around the web