சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரம்: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை என முதல்வர் அறிவிப்பு

நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் தந்தை மகன் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் காவல் நிலையத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது இதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்
 
சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரம்: ரூ.10 லட்சம் நிவாரணம், அரசு வேலை என முதல்வர் அறிவிப்பு

நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் தந்தை மகன் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடை திறந்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

காவல் நிலையத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது

இதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு உதவி ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் நிருபர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை மகன் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் குடும்பத்திற்கு ஒருவர் அரசு வேலை வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு தலைமை காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்த முதல்வர் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

From around the web