அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்தா? தமிழக அரசு அதிரடி முடிவு

அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்படும் நிலையில் தற்போது இன்னும் பள்ளிகள் திறக்க
 

அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்தா? தமிழக அரசு அதிரடி முடிவு

அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்படும் நிலையில் தற்போது இன்னும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களின் நலன் கருதி அமைக்க வேண்டிய புதிய வழிமுறைகள் குறித்து 18 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் தமிழக அரசுக்கு செய்த ஒருசில பரிந்துரைகள் குறித்த தகவல்கள் பள்ளி கல்வித்துறை வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அவைகளில் முக்கியமானது காலாண்டு தேர்வு ரத்து செய்வது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கும் என்பதால் காலாண்டு தேர்வை நடத்துவது சாத்தியம் அற்றது என்பதால் காலம் தேர்வை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளது

அதுமட்டுமின்றி ஆன்லைன் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், அடுத்த கல்வி ஆண்டில் மட்டும் பாடத்திட்டங்களை குறைக்கவும், காலை மாலை என இரண்டு வேளையும் சுழற்சி வகுப்பு வரை பாடம் நடத்தும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு ஒரு சில அதிரடி முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web