10ஆம் வகுப்பு தனித்தேர்வுகளும் பாஸ் என அறிவிப்பா? பரபரப்பு தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற நிலையில் தற்போது தனித்தேர்வர்களும் பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா
 
10ஆம் வகுப்பு தனித்தேர்வுகளும் பாஸ் என அறிவிப்பா? பரபரப்பு தகவல்

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வாயிலாக 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற நிலையில் தற்போது தனித்தேர்வர்களும் பாஸ் என்ற அறிவிப்பை வெளியிட கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வினை இந்த ஆண்டு தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் பயின்ற 9.75 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்த நிலையில் தனித்தேர்வர்களாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களையும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கோரிக்கை அரசு பரிசீலித்ததாகவும், இதனையடுத்து தனித்தேர்வர்களையும் பாஸ் பெற்றவர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் 30,000 தனித்தேர்வர்கள் 10ஆம் வகுப்பு தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web