மும்மொழிக் கொள்கையை அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறதுஎன்றும், மும்மொழிக் கொள்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அம்மாவின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய முதல்வர் கே. பழனிசாமி தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது
 

மும்மொழிக் கொள்கையை அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது
என்றும், மும்மொழிக் கொள்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அம்மாவின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய முதல்வர் கே. பழனிசாமி தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்

மேலும் மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது என்றும், மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர் என்றும், அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் இரு​மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளன என்றும், புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web