மீண்டும் ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை இப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளது தமிழக மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பை விட பசியால் பட்டினியால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும்
 

மீண்டும் ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பால் தமிழக மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை இப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளது தமிழக மக்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பை விட பசியால் பட்டினியால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக படும் கஷ்டங்களை சொல்லி மாளாது

இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருப்பினும் பேருந்து ரயில்கள் உட்பட அனைத்தும் இயங்க வேண்டும் என்றும் அனைவரும் எதிர்பார்த்துக் இருக்கின்றனர்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் தமிழகத்தில் மேலும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். கொரோனா நோயையும் கட்டுப்படுத்த வேண்டும் அதேநேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் செயல்பட்டு வருவதாகவும் எனவே எனவே மீண்டும் ஊரடங்கு விதிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முழுக்க முழுக்க கொரோனாவில் இருந்து மீள முடியும் என்றும் எனவே பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சென்னையில் வீடு வீடாக மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் தான் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்

From around the web