முந்திய நாள் வேலையிழப்பு, அடுத்த நாள் கோடீஸ்வரர்: ஊரடங்கில் ஒரு ஆச்சரியம்

கொரன வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முந்திய நாள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அடுத்த நாளே கோடீஸ்வரராகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் வேலையை இழந்தார். இதனை அடுத்து அவர் மிகவும் சோகமாக வீட்டுக்கு வந்தபோது அடுத்த நாளே, அவர் வாங்கிய லாட்டரி ஒன்றுக்கு ரூபாய் 47 கோடி ரூபாய் பரிசு உள்ளதாக தெரியவந்தது. இதனை அடுத்து
 
முந்திய நாள் வேலையிழப்பு, அடுத்த நாள் கோடீஸ்வரர்: ஊரடங்கில் ஒரு ஆச்சரியம்

கொரன வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முந்திய நாள் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் அடுத்த நாளே கோடீஸ்வரராகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் வேலையை இழந்தார். இதனை அடுத்து அவர் மிகவும் சோகமாக வீட்டுக்கு வந்தபோது அடுத்த நாளே, அவர் வாங்கிய லாட்டரி ஒன்றுக்கு ரூபாய் 47 கோடி ரூபாய் பரிசு உள்ளதாக தெரியவந்தது. இதனை அடுத்து அவரும் அவருடைய மனைவியும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்

வேலை இழந்ததால் வீட்டு செலவிற்கு பணம் இல்லாமல் என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த நிலையில் கடவுள் தங்களுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்திருப்பதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் தாங்கள் இந்த பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழப் போவதில்லை என்றும் தங்களுடைய தேவைக்கு போக மீதமுள்ள பணத்தை பிறருக்கு உதவி செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

From around the web