பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

ஒருபக்கம் இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளராக தெரிவித்த நிலையில் இன்னொரு பக்கம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் ஒன்று வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்தும் மாநில
 

ஒருபக்கம் இந்தியா முழுவதும் வரும் டிசம்பர் முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளராக தெரிவித்த நிலையில் இன்னொரு பக்கம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் ஒன்று வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்தும் மாநில அரசிடமிருந்தும் இன்னும் வெளிவராத நிலையில் மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து வகை பள்ளிகளிலும் 1, 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை வரும் திங்கள் முதல் நடைபெறும் என்றும் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

மேலும் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களும் 17ஆம் தேதி முதல் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web