எனது யூகம் தவறாகிவிட்டது: பாஜக தோல்வி குறித்து அமித்ஷா பேட்டி

டெல்லி தேர்தலில் எனது யூகம் தவறாகிவிட்டது என்றும் அதனால் தான் பாஜக தோல்வி அடைந்தது என அமித்ஷா கூறினார் பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பின் பல மாநிலங்களில் அவரது வியூகத்தால் தான் ஆட்சியைப் பிடித்த நிலையில் டெல்லியில் மட்டும் அவரது வியூகம் பலிக்கவில்லை. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’டெல்லியில் நான் வகுத்த வியூகம் தவறாகிப் போனது தான் பாஜக வின் தோல்விக்கு காரணம் என்று கூறினார் அதுமட்டுமின்றி சிஏஏ சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை
 
எனது யூகம் தவறாகிவிட்டது: பாஜக தோல்வி குறித்து அமித்ஷா பேட்டி

டெல்லி தேர்தலில் எனது யூகம் தவறாகிவிட்டது என்றும் அதனால் தான் பாஜக தோல்வி அடைந்தது என அமித்ஷா கூறினார்

பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்ற பின் பல மாநிலங்களில் அவரது வியூகத்தால் தான் ஆட்சியைப் பிடித்த நிலையில் டெல்லியில் மட்டும் அவரது வியூகம் பலிக்கவில்லை. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’டெல்லியில் நான் வகுத்த வியூகம் தவறாகிப் போனது தான் பாஜக வின் தோல்விக்கு காரணம் என்று கூறினார்

அதுமட்டுமின்றி சிஏஏ சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜகவின் ஒரு சில தலைவர்கள் பேசியது தவறானது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை பயங்கரவாதி போல் விமர்சனம் செய்ததும் தவறானது என்றும் பாஜக தலைவர்களின் இந்த தவறான பிரச்சாரத்தால் தான் டெல்லியில் பாஜக தோல்வியை அடைந்தது என்றும் கூறினார்

மேலும் டெல்லி மக்கள் பாஜகவை முற்றிலுமாக ஒதுக்கி விடவில்லை என்றும் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகள் கொடுத்திருக்கிறார்கள் என்று இதனை வைத்து மீண்டும் டெல்லி மக்களின் நம்பிக்கையை பெற முயற்சி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்

From around the web