ஐடி நிறுவனத்திற்கு லஞ்ச் சப்ளை செய்த பெண்ணுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

மும்பையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றுக்கு தினசரி லஞ்ச் சப்ளை செய்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த பல வருடங்களாக மும்பையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு நடுத்தர வயது பெண் ஒருவர் தினமும் லஞ்ச் சப்ளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ்
 
ஐடி நிறுவனத்திற்கு லஞ்ச் சப்ளை செய்த பெண்ணுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

மும்பையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றுக்கு தினசரி லஞ்ச் சப்ளை செய்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த பல வருடங்களாக மும்பையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு நடுத்தர வயது பெண் ஒருவர் தினமும் லஞ்ச் சப்ளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிய வந்தது.

இதனையடுத்து தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரிடம் லஞ்ச் வாங்கி சாப்பிட்ட அனைவரும் சுகாதார துறை அதிகாரிகளின் கண்காணிப்பின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவரால் யார் யாருக்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவியது என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது

From around the web