காவிரி திறப்பால் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணை!

தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுமையும் போதும் போதும் என்கிற அளவு மழை பெய்து வருகிறது, இதனால் பல இடங்களுக்கு அரசாங்கம் வெள்ள அபாய எச்சரிக்கையையும் கடலோர மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகளில் ரோடு முழுவதும் நீர் தேங்கியே உள்ளது, போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் கன மழை கொட்டித் தீர்க்கிறது. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பு குழுவினர் பணியிலேயே உள்ளனர். தமிழகத்திலும் நீலகிரியில் 200 செமீ வரை மழைப் பதிவானது பதிவாகியுள்ளது,
 
காவிரி திறப்பால் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணை!

தமிழகம் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுமையும் போதும் போதும் என்கிற அளவு மழை பெய்து வருகிறது, இதனால் பல இடங்களுக்கு அரசாங்கம் வெள்ள அபாய எச்சரிக்கையையும் கடலோர மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகளில் ரோடு முழுவதும் நீர் தேங்கியே உள்ளது, போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் கன மழை கொட்டித் தீர்க்கிறது. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பாதுகாப்பு குழுவினர் பணியிலேயே உள்ளனர்.

தமிழகத்திலும் நீலகிரியில் 200 செமீ வரை மழைப் பதிவானது பதிவாகியுள்ளது, பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்பு இருப்பதால் மக்களால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. சில இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்து, போக்குவரத்தினை தடை செய்துள்ளது.

காவிரி திறப்பால் 100 அடியை எட்டவுள்ள மேட்டூர் அணை!

 சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பருக்கினால் வீடுகள் முழுவதும் சேதமாகியுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

எப்போதும் இல்லாத வகையாக கர்நாடகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெரு மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் முழுவதுமாக நிரம்பும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

இதனால் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, நேற்று வரை ஒகேனக்கலில் 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 

கரையோரப் பகுதிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியாக இருப்பதுடன், காவிரி நீரால் நிரம்பி வழிகிறது 

இன்னும் இரண்டு நாட்களுக்குள் மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக விவசாயிகள் பெரு மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web