கணவரின் வேண்டுகோளை அடுத்து ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: நீதிமன்றம் அதிரடி

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும், அவர்கள் அனைவரிடமும் தற்போது தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதும், கூடிய விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த வழக்கின் திருப்புமுனையாக கருதப்படும் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவரது கணவர் சந்தோஷம்
 

கணவரின் வேண்டுகோளை அடுத்து ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: நீதிமன்றம் அதிரடி

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும், அவர்கள் அனைவரிடமும் தற்போது தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதும், கூடிய விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வழக்கின் திருப்புமுனையாக கருதப்படும் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதியின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவரது கணவர் சந்தோஷம் வேண்டுகோள் விடுத்திருந்தார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, \தனது மனைவி வாக்குமூலம் அளித்த நாளில் இருந்து சாப்பிட பிள்ளை என்றும் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி தங்களுடைய செல்போன்களுக்கு நாள்தோறும் பல அழைப்புகள் வருவதாகவும் பாதுகாப்பு கருதி எந்த அழைப்பையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

ம்ர்ர்லும் தனது மனைவி ரேவதிக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அவரது கணவர் சந்தோசம் விடுத்த வேண்டுகோளை அடுத்து சற்று முன்னர் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேவதியின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

From around the web