சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை

நேற்றிரவு பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார் என்பது தெரிந்ததே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருப்பது ஒன்றுதான் வழி என்பதால் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இந்த ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைக்கு அனைத்து இந்திய மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் காய்கறிகள் கிடைக்கும் என்றும் கோயம்பேடு காய்கறி அவர்கள்
 
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை

நேற்றிரவு பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார் என்பது தெரிந்ததே

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருப்பது ஒன்றுதான் வழி என்பதால் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இந்த ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைக்கு அனைத்து இந்திய மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் காய்கறிகள் கிடைக்கும் என்றும் கோயம்பேடு காய்கறி அவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து இன்று அதிகாலை முதலே காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு மார்ச் 27 மற்றும் 28 தேதிகளில் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு 27 மற்றும் 28 ஆம் தேதி விடுமுறை என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

#

From around the web