கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்ததால் அந்த யானை வயிறு வெடித்து பரிதாபமாக பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதுகுறித்து வன அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல் ஓங்கி ஒலித்தது இந்த நிலையில் கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்
 
கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்ததால் அந்த யானை வயிறு வெடித்து பரிதாபமாக பலியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இதுகுறித்து வன அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்ததால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி மருந்து கலந்த அன்னாசிப்பழத்தை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல் ஓங்கி ஒலித்தது

இந்த நிலையில் கேரளாவில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநில வனத்துறை இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தற்போது யானைக்கு வெடி மருந்து கலந்த அன்னாசி பழத்தை கொடுத்தவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது

From around the web