சென்னை மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து திமுக தொடரந்த வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டது இந்த தீர்ப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்தனர். இதுகுறித்து தொண்டர்களிடம் துரைமுருகன் பேசியபோது,
 

சென்னை மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரீனாவில் இடம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து திமுக தொடரந்த வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டது

இந்த தீர்ப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை கேட்டதும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். மேலும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்தனர்.

இதுகுறித்து தொண்டர்களிடம் துரைமுருகன் பேசியபோது, ‘உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகும் போராடி வெற்றி பெற்று தந்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று கூறினார்

From around the web