முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58 திமுகவில் இருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது அவர் தினகரனின் அம்முகவில் இருந்த நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார். 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை திமுக சார்பில் சட்டமன்றத்தில் இருந்த ஒரே எம்.எல்.ஏ பரிதி இளம்வழுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 2006-2011
 

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58

திமுகவில் இருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது அவர் தினகரனின் அம்முகவில் இருந்த நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் காலமானார்.

1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை திமுக சார்பில் சட்டமன்றத்தில் இருந்த ஒரே எம்.எல்.ஏ பரிதி இளம்வழுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

2006-2011 வரை தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி 1984 – 2011 வரை 28 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web