தமிழகத்தில் ஆட்டோக்கள் அனுமதி: ஆனாலும் சில நிபந்தனைகள்

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானம் மற்றும் ரயில்களை இயக்க அனுமதி தந்த அரசு, ஆட்டோக்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை இதனை அடுத்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்போது சில நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாவிற்கு அனுமதி
 
தமிழகத்தில் ஆட்டோக்கள் அனுமதி: ஆனாலும் சில நிபந்தனைகள்

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமானம் மற்றும் ரயில்களை இயக்க அனுமதி தந்த அரசு, ஆட்டோக்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை

இதனை அடுத்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்போது சில நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கலாம் என்றும், ஒரு ஆட்டோவில் ஒரு பயணியை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனைகளாக அறிவித்துள்ளது

இதனையடுத்து தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web