ஆன்லைனில் பொறியியல் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எதிர்ப்பு
 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இருந்து இதுகுறித்து ஈமெயில் வந்துள்ளதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியானது

இந்த நிலையில் யுஜிசி அறிவுரையின்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தற்போது அண்ணா பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது பொறியியல் இளங்கலை முதுகலை மாணவர்களுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

மேலும் இந்த ஆண்டு மட்டும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக ஆன்லைன்னில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web