மருத்துவரையே பதம் பார்த்த கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்றி உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது உறுதியாகியுள்ளது இதனையடுத்து நேற்று வரை அவர் சிகிச்சை அளித்த அனைத்து நோயாளிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது டாக்டரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா உறுதி செய்ததை அடுத்து அவரது குடும்பத்தினர்
 
மருத்துவரையே பதம் பார்த்த கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்றி உள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது உறுதியாகியுள்ளது

இதனையடுத்து நேற்று வரை அவர் சிகிச்சை அளித்த அனைத்து நோயாளிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது டாக்டரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா உறுதி செய்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

From around the web