தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே எண்ணிக்கையில் பாதிப்பும், குணமடைவதும்!

 

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குணமடைந்தோர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையாக இருந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5242 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 651,370 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 1272 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும்சென்னையில் இன்றும் 1200க்கும் அதிகமான பாதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 67 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 10187 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5222 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 597,033 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 89,450 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 79,96,148,பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web