ஸ்ரீதேவியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் மாரடைப்பால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது இந்த நிலையில் தற்போது தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் விழுந்து மூழ்கியது தற்செயல் மூழ்கல் (accidental drowning) என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தடயவியல் அறிக்கையிலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் எவ்வித
 

ஸ்ரீதேவியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் மாரடைப்பால் நிகழ்ந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் விழுந்து மூழ்கியது தற்செயல் மூழ்கல் (accidental drowning) என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தடயவியல் அறிக்கையிலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் இதுவொரு எதிர்பாராத விபத்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web