இதுவும் கடந்து போகும்- கொரோனா கவலை வேண்டாம்

இரண்டு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில், சமூக வலைதளத்தில் அதிகம் பேசும் ஒரு மனநல மருத்துவர் பேசுகையில் 2002ல் சார்ஸ் வைரஸால் இது போல் உலகமே பயத்தில் இருந்தது. கொரோனாவை விட கொடியது சார்ஸ். கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது பின்பு பரவிய மார்ஸ் வைரஸ் அந்த ரகத்தை சார்ந்ததுதான் அதுவும் கட்டுக்குள் வந்தது என பேசினார். அந்த வைரஸ் எல்லாம் சில நாட்கள் உலகை சுற்றி வந்தாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உண்மை. இந்த கண்ணோட்டத்தில் பாஸிட்டிவாக அவர்
 

இரண்டு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில், சமூக வலைதளத்தில் அதிகம் பேசும் ஒரு மனநல மருத்துவர் பேசுகையில் 2002ல் சார்ஸ் வைரஸால் இது போல் உலகமே பயத்தில் இருந்தது. கொரோனாவை விட கொடியது சார்ஸ். கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது பின்பு பரவிய மார்ஸ் வைரஸ் அந்த ரகத்தை சார்ந்ததுதான் அதுவும் கட்டுக்குள் வந்தது என பேசினார்.

இதுவும் கடந்து போகும்- கொரோனா கவலை வேண்டாம்

அந்த வைரஸ் எல்லாம் சில நாட்கள் உலகை சுற்றி வந்தாலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது உண்மை.

இந்த கண்ணோட்டத்தில் பாஸிட்டிவாக அவர் பேசி இருந்தார். இது உண்மையும் கூட உலக நாடுகளும் அரசாங்கங்களும் தீவிர முயற்சி எடுத்து இது போல விசயங்களை கட்டுக்குள் கொண்டு வந்து விடும் என்பது உண்மை.

பக்கத்து மாநிலமான கேரளாவை அச்சுறுத்திய நிபோலா வைரஸ் என்ற கொடிய நோயும் கட்டுப்பட்டுள்ளது.

1994ல் இந்தியாவில் ப்ளேக் நோய் ஏற்பட்டு அது பலருக்கும் வெகு வேகமாக பரவியது. குஜராத் சூரத் நகரில் பலர் இந்த தொற்றுக்கு பலியாகினர்.

மிகுந்த பரபரப்பையும் அச்சத்தையும் இந்த ப்ளேக் தொற்று ஏற்படுத்தியது. 50க்கும் மேற்பட்டோர் இதற்கு உயிரிழந்தனர். இருப்பினும் சில நாட்கள் பதட்டமாக இருந்த நிகழ்வு பின்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதுபோல் தற்போதுள்ள கொரோனா தொற்றும் அழியும் என்பது உண்மை. இதுவும் கடந்து போகும் என்பது உண்மை.

இதுவும் கடந்து போக வேண்டுமென்றால் தயவு செய்து வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து பொழுதை போக்குங்கள்.இதை செய்தால் அனைவருக்கும் நலம்

From around the web