ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையா? ஜூலை 6 வரை அவகாசம் அளித்த சென்னை ஐகோர்ட்

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை ஆறாம் தேதி வரை சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் திறக்கப்படவில்லை. எனவே கடந்த சில வாரங்களாக ஒருசில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி சென்னை
 

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையா? ஜூலை 6 வரை அவகாசம் அளித்த சென்னை ஐகோர்ட்

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஜூலை ஆறாம் தேதி வரை சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் திறக்கப்படவில்லை. எனவே கடந்த சில வாரங்களாக ஒருசில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புக்களை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது குறித்து உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துக்களை பெற்று தெரிவிக்க, 2 வார கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஐகோர்ட் உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

From around the web