5 மண்டலங்களில் மட்டுமே 1000ஐக்கும் குறைவு: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல் சற்றுமுன் வெளீயாகியுள்ளது. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 31,896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 5216 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 4082 பேர்களும், தேனாம்பேட்டை
 
5 மண்டலங்களில் மட்டுமே 1000ஐக்கும் குறைவு: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல் சற்றுமுன் வெளீயாகியுள்ளது.

இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 31,896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 5216 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது

மேலும் தண்டையார்பேடை மண்டலத்தில் 4082 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3844 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3409 பேர்களும், திருவிக நகர் மண்டலத்தில் 2922 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 3150 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1809 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1395 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள மணலி, மாதவரம், ஆலந்தூர், பெருங்குடி, சோலிங்கநல்லூர் ஆகிய ஐந்து மண்டலங்களில் மட்டுமே 1000ஐக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்து கீழ்க்கண்ட அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

5 மண்டலங்களில் மட்டுமே 1000ஐக்கும் குறைவு: சென்னை கொரோனா நிலவரம்

From around the web