10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? சி.பி.எஸ்.இ. தகவல்

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடதக்கது இந்த நிலையில்
 

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? சி.பி.எஸ்.இ. தகவல்

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்சி பிரமாணப் பத்திரம் ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்தப் பிரமாணப் பத்திரத்தில், ‘ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது

அதாவது சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். அதாவது 3 படங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். மூன்று படங்களுக்கு மட்டும் தேர்வு எழுதியவர்களுக்கு சிறந்த இரண்டு பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கும் மட்டும் தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு மற்றும் செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

From around the web