ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவால் பயங்கர கலவரம்: பெங்களூரில் பதட்டம்

சர்ச்சைக்குரிய ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பெங்களூர் நகரமே கலவரத்தில் உள்ளது என்பதும் இதனால் 110 பேர் கைதாகி உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெங்களூரு புலிகேசி நகர் என்ற பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி என்பவரின் உறவினர் நவீன். இவர் தனது பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்தார் இந்த பதிவால் அந்த குறிப்பிட்ட மதத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கலவரத்தில் இறங்கினர்.
 

சர்ச்சைக்குரிய ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் பெங்களூர் நகரமே கலவரத்தில் உள்ளது என்பதும் இதனால் 110 பேர் கைதாகி உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரு புலிகேசி நகர் என்ற பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி என்பவரின் உறவினர் நவீன். இவர் தனது பேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்தார்

இந்த பதிவால் அந்த குறிப்பிட்ட மதத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கலவரத்தில் இறங்கினர். மாற்று மதத்தின் கோவில்கள் தாக்கப்படும் அபாயம் இருந்ததை அடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் களமிறக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கலவரம் செய்ய முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் சர்ச்சைக்குரிய பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்து அதனால் கலவரத்திற்கு காரணமாக இருந்த நவீன் கைது செய்யப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்

பெங்களூர் புலிகேசி தொகுதி எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு சூறையாடப்பட்டதை அடுத்து அவருடைய வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் ஒரு நகரமே கலவரத்தில் உள்ளதை அடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்பவர்கள் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

From around the web