ஆகஸ்ட் இறுதியில் பள்ளிகள் திறக்க திட்டம்: கல்வி அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு முழு அளவில் அடங்கிய பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம் இந்த நிலையில் ஆந்திராவில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆகஸ்ட் மாத இறுதியில்
 

ஆகஸ்ட் இறுதியில் பள்ளிகள் திறக்க திட்டம்: கல்வி அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு முழு அளவில் அடங்கிய பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் ஆந்திராவில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆகஸ்ட் மாத இறுதியில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்காக பள்ளிகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாகவும் கார்ப்பரேட் பள்ளிகள் போன்று நவீனமயமாக்க்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் ஜூலை இறுதியில் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் ஆகஸ்ட் இறுதியில் பள்ளிகள் திறக்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டிலேயே தற்போது ஆந்திராவில் மட்டும் தான் அனைத்து அரசுப்பள்ளிகளும் நவீன மயமாக்கப்படுவதாகவும், இந்த பணிகள் மிக மிக விரைவில் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆந்திராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,489 என்று இருக்கும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web