சிஏ தேர்வு எழுத விருப்பமில்லையா? விலகிக்கொள்ளுங்கள்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஏ தேர்வு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் சிஏ தேர்வுக்கு தயாரான பலர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தேர்வு வைக்கும் நேரத்தில் மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. இந்த நிலையில் சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை மாத தேர்வில் இருந்து விலக விருப்புபவர்கள் அதனை முறைப்படி
 

சிஏ தேர்வு எழுத விருப்பமில்லையா? விலகிக்கொள்ளுங்கள்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சிஏ தேர்வு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனால் சிஏ தேர்வுக்கு தயாரான பலர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தேர்வு வைக்கும் நேரத்தில் மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது.

இந்த நிலையில் சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூலை மாத தேர்வில் இருந்து விலக விருப்புபவர்கள் அதனை முறைப்படி தெரிவித்தால் தேர்வுக் கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது

இதனால் சிஏ தேர்வு எழுத தயாராக இருந்தவர்கள் அதிருப்தி அடைந்தாலும் கட்டிய கட்டணம் வீணாகவில்லை என்ற எண்ணத்தில் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

From around the web