இந்தியாவில் 13வது உயிரிழப்பு: 602 பேர் பாதிப்பு

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில் இன்று 13வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர் எண்ணிக்கை இரண்டாகவும் இந்தியாவில் 14ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு இதுவரை இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47
 
இந்தியாவில் 13வது உயிரிழப்பு: 602 பேர் பாதிப்பு

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில் இன்று 13வது உயிரிழப்பு நேர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பரிசோதனை முடிவு வெளிவராத நிலையில் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர் எண்ணிக்கை இரண்டாகவும் இந்தியாவில் 14ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு இதுவரை இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 649 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

From around the web