பாத வெடிப்பு

பெண்களின் ஆயிரம் பிரச்சனைகளில் மிக முக்கியமானது பாத வெடிப்பாகும். பாதவெடிப்புக்கு காலுக்கு பொருந்தாத செருப்பு, நாட்பட்ட அழுக்கு, உப்பு தண்ணி/ சோப்பு தண்ணீரில் அதிக நேரம் நிற்பது, ஊட்டச்சத்து குறைபாடு என பலவித காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்!! பாதவெடிப்பு மற்றவரின் கேலிக்கு ஆளாவதோடு கடுமையான வலியையும் கொடுக்கும், சிலருக்கு ரத்தக்கசிவும் ஏற்படும். விலை உயர்ந்த புடவைகளை உடுத்தும்போது பாதவெடிப்பில் ஜரிகை மாட்டி புடவையும் பாழ்படும். இனி பாதவெடிப்பை குணமாக்கும் வைத்திய முறைகள் சிலவற்றை பார்க்கலாம்!! வாரம் ஒருமுறை
 
பாத வெடிப்பு

பெண்களின் ஆயிரம் பிரச்சனைகளில் மிக முக்கியமானது பாத வெடிப்பாகும். பாதவெடிப்புக்கு காலுக்கு பொருந்தாத செருப்பு, நாட்பட்ட அழுக்கு, உப்பு தண்ணி/ சோப்பு தண்ணீரில் அதிக நேரம் நிற்பது, ஊட்டச்சத்து குறைபாடு என பலவித காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்!! பாதவெடிப்பு மற்றவரின் கேலிக்கு ஆளாவதோடு கடுமையான வலியையும் கொடுக்கும், சிலருக்கு ரத்தக்கசிவும் ஏற்படும். விலை உயர்ந்த புடவைகளை உடுத்தும்போது பாதவெடிப்பில் ஜரிகை மாட்டி புடவையும் பாழ்படும்.

இனி பாதவெடிப்பை குணமாக்கும் வைத்திய முறைகள் சிலவற்றை பார்க்கலாம்!!

வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழச்சாறு, சிறிதளவு ஷாம்பு கலந்து கால்களை மூழ்க வைத்து, பியூமிக் கற்களால் தேய்த்து கழுவ, பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படும். பிறகு, மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை, அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்து வந்தாலே பாத வெடிப்பு நீங்கும். இதற்கு நேரமில்லாதவர்கள் கீழ்க்காணும் முறைகளை பயன்படுத்தி வந்தாலும் பாதவெடிப்பு குணமாகும்…

பாத வெடிப்பு

1. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

2.  மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

3.  இரவு படுக்க போகும்முன் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்

4. உறங்க செல்லும்போது செயற்கை நூலினால் செய்யப்பட்ட கால் உறைகளைத் தவிர்த்து, காட்டன் கால் உறைகளை அணியலாம்

5. பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

6. பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

7. நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து பாத வெடிப்புகளில் தேய்த்து வந்தாலும் குணமாகும்..

8. வேப்பிலையோது மஞ்சளை அரைத்து பூசிவர பாதவெடிப்பு சீராகும்…

9. குளித்து முடித்ததும் ஈரம்போக பாதத்தினை நன்கு துடைத்து, பின்னர் விளக்கெண்ணெயினை சிறிது தடவிவர குணம் தெரியும்.

10. பாத வெடிப்பு சரியாக – பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பூசி வந்தாலும் பாத வெடிப்பு குணமாகும்…

From around the web