இந்த படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லை என சத்தியம் செய்து மறுக்கும் யோகிபாபு

காமெடி நடிகர் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்த படங்களை, அவர் ஹீரோவாக நடிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விளம்பரம் செய்து ஒரு வெளியாகி வருகின்றன என்பதும், அவ்வாறு வெளிவந்த ஒருசில படங்கள் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகி தோல்வி அடைந்துள்ளன என்பதும் அறிந்ததே இந்த நிலையில் சக்திசிவன் என்பவர் இயக்கிய ’தெளலத்’ என்ற திரைப்படத்தின் விளம்பரம் என்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் யோகி
 

காமெடி நடிகர் ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்த படங்களை, அவர் ஹீரோவாக நடிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விளம்பரம் செய்து ஒரு வெளியாகி வருகின்றன என்பதும், அவ்வாறு வெளிவந்த ஒருசில படங்கள் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகி தோல்வி அடைந்துள்ளன என்பதும் அறிந்ததே

இந்த நிலையில் சக்திசிவன் என்பவர் இயக்கிய ’தெளலத்’ என்ற திரைப்படத்தின் விளம்பரம் என்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் யோகி பாபு

ஏனெனில் இந்த படத்தில் அவர் நடிக்கவே இல்லை. ஆனால் அவருடைய புகைப்படத்தை வைத்துதான் இந்த படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ‘இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் இந்த படத்தின் விளம்பரத்தில் எவ்வாறு என்னுடைய புகைப்படம் வந்தது என்றே தெரியவில்லை என்றும் அதற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார் யோகிபாபுவின் புகைப்படத்தை அவர் நடிக்காத ஒரு படத்தில் பதிவு செய்து விளம்பரம் செய்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

From around the web