மிஷ்கின் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? சாய்பல்லவி

துப்பறிவாளன் படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கவுள்ள படத்தில் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கதையை கேட்டவுடன் சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து சாய்பல்லவி கூறியதாவது: “என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்றும் சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை
 
துப்பறிவாளன் படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கவுள்ள படத்தில் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கதையை கேட்டவுடன் சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து சாய்பல்லவி கூறியதாவது: “என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்றும் சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரேமம் என்ற மலையாள  படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை சாய்பல்லவி தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம்  விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் சாய்பல்லவி தற்போது , சூர்யாவுடன் ‘என்ஜிகே’, தனுசுடன் ‘மாரி-2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web