சரத்குமாரை பார்த்து ‘யார் நீங்க’ என்று ஏன் கேட்கவில்லை: தூத்துகுடி இளைஞர்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30ஆம் தேதி தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டடவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறியும், பலியானாவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் தூத்துகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க சென்றபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு வாலிபர் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று கேள்வி எழுப்பியதோடு, 100 நாள் எங்கே இருந்தீர்கள் என்றும் கேட்டார். இதுகூறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனால்
 

சரத்குமாரை பார்த்து ‘யார் நீங்க’ என்று ஏன் கேட்கவில்லை: தூத்துகுடி இளைஞர்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30ஆம் தேதி தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டடவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறியும், பலியானாவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் தூத்துகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை பார்க்க சென்றபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு வாலிபர் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க’ என்று கேள்வி எழுப்பியதோடு, 100 நாள் எங்கே இருந்தீர்கள் என்றும் கேட்டார். இதுகூறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

ஆனால் இந்த வாலிபர் கேட்ட கேள்வி சமூகா வலைத்தளங்களில் ரஜினியின் பெயரை டேமேஜ் ஆக்குவதை அறிந்த அந்த வாலிபர், ‘தான் ‘யார் நீங்க’ என்று ரஜினியிடம் கேள்வி கேட்டதன் நோக்கம் வேறு என்றும், மீடியாக்கள் தங்கள் இஷ்டத்திற்கு நான் கேட்ட கேள்வியை தவறாக திரித்து செய்தி வெளியிட்டதாகவும் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டார்

சரத்குமாரை பார்த்து ‘யார் நீங்க’ என்று ஏன் கேட்கவில்லை: தூத்துகுடி இளைஞர்

இந்த நிலையில் ரஜினியை அடுத்து நேற்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நேற்று தூத்துகுடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் ரஜினியிடம் கேள்வி கேட்ட அந்த வாலிபருக்கும் ஆறுதல் கூறினார். ஆனால் ரஜினியிடம் ‘யார் நீங்க’ என்று கேள்வி கேட்ட வாலிபர் அதே கேள்வியை சரத்குமாரிடம் கேட்கவில்லை.

இதுகுறித்து சந்தோஷ் கூறியபோது, ‘எங்களுடைய 100 நாள் போராட்டத்தில் சரத்குமார் ஒரு நாள் பங்கெடுத்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் நாங்கள் குடித்து கொண்டிருக்கும் மிகவும் மோசமான அந்த தண்ணீரையே அவரும் குடித்தார். எனவேதான் அவரை நீங்கள் யார் என்று கேட்கவில்லை’’ என்று கூறினார்.

From around the web