தயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்?

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி போதுமான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது அவர் சக்ரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்திலிருந்து
 
தயாரிப்பாளர் திடீர் விலகல்: விஷாலின் அடுத்த படம் டிராப்?

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி போதுமான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது அவர் சக்ரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் விஷாலின் சம்பளம் உட்பட நடிகர் நடிகையர் சம்பளம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாலும் இந்த படத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்

இதனையடுத்து இந்தப் படம் டிராப் செய்யப்பட்டு உள்ளதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது இருப்பினும் இந்த படம் டிராப் செய்யப்படாது என்றும் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் இந்த படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

From around the web