ரஜினியின் கருத்துக்கு ஆதரவா? எல்லாமே பொய்: விஜய்சேதுபதி

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரகளை நேரில் சென்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அமைதியாக நடநது வந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாகவும், போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் ஆவேசமாகா கூறினார். ரஜினியின் இந்த கருத்தை திரித்து பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி ரஜினியின் இந்த கருத்தை ஆதரித்து டுவிட்டரில் பதிவு செய்ததாக
 

ரஜினியின் கருத்துக்கு ஆதரவா? எல்லாமே பொய்: விஜய்சேதுபதி

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரகளை நேரில் சென்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அமைதியாக நடநது வந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாகவும், போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் ஆவேசமாகா கூறினார்.

ரஜினியின் இந்த கருத்தை திரித்து பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் விஜய்சேதுபதி ரஜினியின் இந்த கருத்தை ஆதரித்து டுவிட்டரில் பதிவு செய்ததாக கூறப்பட்டது,.

ஆனால் இந்த செய்தியை விஜய்சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: டுவிட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

From around the web