48 மணி நேரத்தில் நடைபெறும் விறுவிறுப்பாக  படத்தில் வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று வெல்வெட் நகரம். சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு வரும் இந்த ஆக்சன் திரில்லர் படத்தின் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கும் வரலட்சுமி கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடித்து வருகிறார். ஒரு முக்கிய குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரத்தைத்
 
நடிகை வரலட்சுமி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று வெல்வெட் நகரம். சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டு வரும் இந்த ஆக்சன் திரில்லர் படத்தின் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கும் வரலட்சுமி கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடித்து வருகிறார். ஒரு முக்கிய குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் வரலட்சுமி. அங்கு சந்திக்கும் த்ரில் சம்பவங்களை சொல்லும் படம் தான் ‘வெல்வெட் நகரம்’
இந்த படத்திற்கு  திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

From around the web