பிக் பாஸ் செய்த வேலை… கவினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின். எந்த சீசனிலும் இல்லாத அளவு, 75 நாட்களுக்குள் 3 காதல் செய்து அதனை உண்மைபோலவே காட்டி எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் கவின், மிக நேர்த்தியான விளையாட்டு இதுதான் என்று அவர் மனதிற்குள் அப்படி ஒரு நினைப்பு. அபிராமி விஷயத்தில்கூட அவர் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, லேசாக
 
பிக் பாஸ் செய்த வேலை… கவினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வருபவர் கவின்.

எந்த சீசனிலும் இல்லாத அளவு, 75 நாட்களுக்குள் 3 காதல் செய்து அதனை உண்மைபோலவே காட்டி எவிக்ஷனில் இருந்து தப்பிக்கிறார் கவின், மிக நேர்த்தியான விளையாட்டு இதுதான் என்று அவர் மனதிற்குள் அப்படி ஒரு நினைப்பு.

பிக் பாஸ் செய்த வேலை… கவினுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

அபிராமி விஷயத்தில்கூட அவர் பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, லேசாக ஒதுங்கிக் கொண்டார், அதன்பின்னர் சாக்‌ஷியிடம் இவரே நெருங்கிப் பழகியதுடன், காதலை வெளிப்படுத்தவும் செய்தார். ஆனால் மூன்று நாட்கள் கூட நீடித்திராத நிலையில் ஃப்ரூட்டு காலர் ஆஃப் த வீக்கில் ஒரு நபர் நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள் என்று கேட்க, நான் யாரையுக் காதலிக்கவில்லை என்று சொல்லி ஓரே போடாக போட்டார்.

அதன்பின்னர் ஷாக்சியிடம் விலகி, லாஸ்லியாவிடம் நெருக்கம் காட்டி வந்தார், ஷாக்சி பலமுறை அழுத போதும் அதனை பொய் என்று சொல்லி அவர் மீது பழி போட செய்தார்.

தற்போது லாஸ்லியாவிடம் நெருங்கிப் பழகி வீட்டில் பேசும் வரை சென்றுள்ளார், இடையில் தவறு என்று சுட்டிக் காட்ட நினைத்த சேரனையும் தவறாகப் பேசினார்.

தற்போது இவருக்கு ஒரு பெரிய ஆப்பு வைத்திருக்கிறார் பிக் பாஸ் அது வேற எதுவும் இல்ல, லாஸ்லியாவின் தந்தையின் என்ட்ரிதான். இன்றைய ப்ரோமோ களைகட்டியுள்ளது.

From around the web