கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா-கார்த்தி

சமூக சேவை செய்வதில் பெரும் அக்கறை காட்டி வரும் சூர்யா-கார்த்தி சகோதரர்கள் தற்போது வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் கேரளாவின் அணைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்பு அதிகமாகியுள்ளது. இந்த
 
surya karthi

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா-கார்த்திசமூக சேவை செய்வதில் பெரும் அக்கறை காட்டி வரும் சூர்யா-கார்த்தி சகோதரர்கள் தற்போது வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் கேரளாவின் அணைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்பு அதிகமாகியுள்ளது.

கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா-கார்த்திஇந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் முதல் ஆளாக கேரள வெள்ள நிவாரண நிதி வழங்கியவர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் கார்த்தியின் படங்கள் தமிழகத்தை போலவே கேரளாவிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web